தற்பொழுது போட்டோ எடிட்டிங் வேலைகள் செய்வது ரொம்ப சுலபம். சில ஆண்டுகளுக்கு முன்பு எல்லாம் போட்டோஷாப் – புகைப்படக் கலைஞர்கள் மட்டுமே செய்து கொண்டிருந்த இந்த வேலைகளை, தற்பொழுது வெளி வந்திருக்கும் சின்ன சின்ன மென்பொருள்கள் – டூல்கள் – பிளகின்கள் மூலம் மிக எளிதாக செய்துவிட முடிகிறது. அது மட்டுமா? ஒரு புரோபசனல்போட்டோ கிராபிக் டிசைனர் செய்யும் அளவிற்கு போட்டோ டிசைன் செய்யக்கூடிய மென்பொருட்கள் – டூல்கள் வந்துவிட்டன.
விதவிதமான எஃபக்ட்கள் – Multiple Photo Effects, விதவிதமான பான்ட்கள் (Various Fonts), பேக்ரவுண்ட்கள் – Backgrounds என எல்லாவற்றையும் ஒரு சில கிளிக்குகள் செய்து நினைத்த டிசைனை நிமிட நேரத்தில் கொண்டு வந்துவிடலாம்.
அதுபோன்ற ஒரு அருமையான போட்டோ எடிட்டிங் மென்பொருள் (Plugin) கூகிள் நிக். இந்த மென்பொருள் முன்பு கட்டண மென்பொருளாக இருந்தது. தற்பொழுது கூகிள் இலவசமாக தரவிறக்க கொடுத்திருக்கிறது.
இதைப் பயன்படுத்தி உங்களுக்குத் தேவையான போட்டோக்கோளை எடிட்டிங் செய்து, விருப்பமான டிசைன்களை அமைத்து, சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து மகிழலாம்.
இந்த பிளகின் பற்றி கூகிள், "Easily create the photos you've imagined with six powerful plug-ins for Photoshop, Lightroom, or Aperture" என குறிப்பிட்டுள்ளது.
போட்டோநிக் டூல் மூலம் செய்யப்படும் போட்டோ பில்டரிங் வேலைகள்:
Analog Efex Pro, Silver Efex Pro, Color Efex Pro, Viveza, HDR Efex Pro, Sharpener Pro, Dfine
சமூக இணையதளங்களில் விவிதமான போட்டோஸ், மீம்ஸ் கிரியேட் செய்து பகிர்பவர்கள் போட்டோ பிரியர்கள் என அனைவரையும் பயன்படும் டூல் இது.
இந்த மென்பொருள் Windows, Mac கம்ப்யூட்டர்களுக்கு கிடைக்கிறது.
குறிப்பு: இந்த டூலை நிறுவுவதற்கு – Install உங்கள் கம்ப்யூட்டரில் போட்டோஷாப் சிசி – Photoshop cc அல்லது ஏதேனும் அடோப் போட்டோஷாப் மென்பொருள் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.
கூகிள் நிக் மென்பொருள் தரவிறக்கம் செய்ய சுட்டி:
Tags: Photo Editing Software, Free google Nik Photo Editing software, Free Photo editing software google Nik. Photo editing tool google nik, Google Nik collection Tool, Nik Plugin for Adobe Photoshop.
ஒரு போட்டோவை அழகாக்க, அசிங்கமாக்க?, பின்னணிகள் அமைக்க, பார்டர் அமைக்க, லைட்டிங் எஃபக்ட் கொடுக்க இப்படி இன்னும் விதவிதமான Effects கொடுக்கவும், புதிய படங்களை உருவாக்கவும் பயன்படும் மென்பொருள் போட்டோஷாப்.
இந்த மென்பொருளை பயன்படுத்த கற்றுக்கொண்டால், நீங்களும் ஒரு தொழிற்முறை போட்டோஷாப் டிசைனராக பரிமளிக்கலாம். ஆனால் எங்கு அதை கற்றுக்கொள்வது? யார் கற்றுக்கொடுப்பார்கள்? அதற்கு கட்டணம்செலுத்த வேண்டுமா? அப்படியே கற்றுக்கொண்டாலும், அது முழுமையான போட்டோஷாப் அறிவை தருமா? என்ற கேள்விகள் எழாமல் இருப்பதில்லை. இந்த கேள்விகளுக்கு பதில் தெரிந்துகொள்வதற்கு முன்பு, நமது டெக் தமிழன் வலைத்தளத்தின் முகநூல் பக்கத்தை, இதற்கு முன்பு லைக் செய்யாதவர்கள் லைக் பட்டனை கிளிக் செய்து விடுங்கள்.
https://www.facebook.com/plugins/like.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FThangamPalaniBlog%2F&width=450&layout=standard&action=like&size=small&show_faces=false&share=true&height=35&appId
கட்டணம் கொடுத்து, கம்ப்யூட்டர் படிப்பு படிப்பதெல்லாம் இப்பொழுது வேலைக்கு ஆகாது. தியரி படிப்பதால் ஒன்றுமே விளையாது. தெரிந்துகொள்ள முடியும். அவ்வளவுதான். படித்ததை செயல்படுத்தினால் மட்டும் அது பற்றிய நல்ல அறிவை, தெளிவை பெற முடியும். அந்த வகையில் போட்டோஷாப் கற்றுக்கொள்ள நிறைய டுடோரியல்கள் இருக்கின்றன. வீடியோக்களாக இருக்கின்றன. PDF பைல்களாக இருக்கின்றன.
உங்களுக்கு வசதி எப்படியோ அதை பயன்படுத்தி கற்றுக்கொள்ள முடியும். வீடியோ டுடோரியலை பார்த்துக் கொள்வதை விட, PDF பைலாக இருக்கும் பைல்களை டவுன்லோட் செய்து வைத்துக்கொண்டால், வேண்டும்பொழுது எடுத்து பார்த்து தெரிந்துகொள்ள முடியும். அந்த வகையில் PDF ப்பைலகளாக கிடைக்கும் போட்டோஷாப் டுடோரியல்களை டவுன்லோட் செய்ய இணைப்பை இங்கு கொடுக்கிறோம்.
1. போட்டோஷாப் பற்றிய அடிப்படைகளைத் தெரிந்துகொள்ள இந்த Photoshop CS6 Tutorial உதவும்.
2. போட்டோஷாப்பில் உள்ள டூல்களைப் பற்றி அருமையா சொல்லியிருக்கிறார்கள் இந்த Basic Photoshop Tutorials லில்.
3. இந்த இணைய பக்கத்தில் Photoshop Cs டிப்ஸ் & ட்ரிக்ஸ்சை PDF பைலாக டவுன்லோட் செய்ய கொடுத்திருக்கிறார்கள்.
4. போட்டோஷாப் சிஎஸ்3 டுடோரியல் இங்கு PDF ஆக கொடுக்கப்பட்டுள்ளது.
இவை யாவும் அடிப்படைகளை கற்றுத் தெளிய கொடுக்கப்பட்டிருக்கும் டுடோரியல்கள். ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருப்பவை.
5. போட்டோஷாப் பற்றிய அடிப்படை விளக்கங்களை கொடுக்கிறது Adobe Photoshop Tutorial
6. தமிழில் போட்டோஷாப் பிடிஎப் டவுன்லோட் செய்ய
தமிழில் வேண்டுமானால் கீழுள்ள இணைப்புகளை பயன்படுத்தலாம்.
தமிழில் போட்டோஷாப்
போட்டோஸாப் தமிழில்
இனி என்ன டுடோரியல்களை படித்துப் பார்த்து, தெரிந்துகொண்டு, போட்டோஷாப்பில் எக்ஸ்பர்ட்டாக ஆக வேண்டியதுதானே பாக்கி. அதற்கு முன்பு கட்டாயம் உங்களுடைய கம்ப்யூட்டரில் போட்டோஷாப் சாப்ட்வேர் டவுன்லோட் செய்து, இன்ஸ்டால் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.
போட்டோஷாப் டவுன்லோட் செய்ய சுட்டி: Download Adobe Photoshop.
இந்த இரண்டு வலைத்தளங்களும் தமிழில் போட்டோஷாப் அடிப்படைகளை கற்றுக்கொடுக்கிறது.
போட்டோஷாப் கற்றுக்கொடுக்க எண்ணற்ற வீடியோ டுடோரியல்கள் உண்டு. அவற்றையும் பயன்படுத்தலாம்.
Tags: Tamil Photoshop, Photoshop Tutorial PDF, Photoshop Tutorial in Tamil, Learn Photoshop in Tamil.
போட்டோஷாப் கற்றுக்கொள்ள எண்ணற்ற வீடியோ சானல்கள் யூடியூப்பில் உள்ளன. அவற்றில் பேசிக் கற்றுக்கொள்ள உதவும் இணையதளங்கள் ஒருசிலவற்றை பற்றி இங்கு தெரிந்துகொள்வோம்.
போட்டோவை எடிட்டி செய்ய, சைஸ் மாற்றி அமைக்க, புதிய டிசைன்கள் உருவாக்க என பல்வேறு பயன்பாடுகளுக்கு உதவும் மென்பொருள் போட்டோஷாப். புதிய கற்பனை படங்களை – கிராபிக்ஸ் படங்களை உருவாக்குவதற்கும் இதை பயன்படுத்தலாம்.
போட்டோஷாப் கற்றுக்கொள்ள ஆர்வமுடையவர்களுக்கு இந்த யூடியூப் சேனல்கள் பயன்படும். ஆரம்ப காலத்தில் சிம்பிளாக இருந்த போட்டோஷாப் மென்பொருள் தற்பொழுது பல பதிப்புகளை கண்டு நம்ப முடியாத பல விதமான வசதிகளை பெற்றுள்ளது.
போட்டோஷாப் பதிப்புகள்:
1990 – PHOTOSHOP 1.0
1991 – PHOTOSHOP 2.0
1994 – PHOTOSHOP 3.0
1996 – PHOTOSHOP 4.0
1998 – PHOTOSHOP 5.0
1999 – PHOTOSHOP 5.5
2000 – PHOTOSHOP 6.0
2001 – PHOTOSHOP ELEMENTS
2002 – PHOTOSHOP 7.0
2003 – PHOTOSHOP CS
2005 – PHOTOSHOP CS2
2007 – PHOTOSHOP CS3
2008 – PHOTOSHOP CS4
போட்டோஷாப் கற்றுக்கொள்ள உதவிடும் யூடியூப் சேனல்கள் :
அடோப் போட்டோஷாப் அடிப்படைகளை கற்றுக்கொள்ள இந்த சேனல் உதவுகிறது.
சுட்டி: Learn Photoshop Basic
அடோப் போட்டோஷாப் சிஎஸ்6 பேசிக் கற்றுக்கொள்ள இந்த வீடியோ உதவுகிறது.
சுட்டி: Learn Adobe Photoshop cs6
போட்டோஷால் சிசி கற்றுக்கொள்ள இந்த வீடியோ டுடோரியல் உதவுகிறது.
சுட்டி: Learn Adobe Photoshop CC Basic
போட்டோஷாப் 7.0 அடிப்படை கற்றுக்கொள்ள இந்த வீடியோ உதவுகிறது.
சுட்டி: Learn Adobe Photoshop 7.0 Basic
போட்டோஷாப் ட்ரெயினிங் சேனல்:
சுட்டி: Photoshop Training Channel
போட்டோஷாப் டுடோரியல் சேனல்:
சுட்டி: Photoshop Tutorial Channel
தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ள:
Photoshop tutorial in Tamil
இது தவிர மேலும் பல வீடியோ டுடோரியல்கள், இணையதளங்கள், பிடிஎப் டாகுமெண்ட்கள் போன்றவை போட்டோஷாப் கற்றுக்கொள்ள இணையத்தில் கிடைக்கின்றன.
Tags: Photoshop tutorials in YouTube, Learn Photoshop, Photoshop Basic video tutorials, Tamil Photoshop Tutorials, Basic Learning Photoshop videos.
Last Update :11-03-2016
போட்டோஷாப் மூலம் ஒரு படத்திற்கு பார்டர் அமைப்பது எப்படி ? அது ரொம்ப சுலபம்தாங்க. எப்படின்னு கேட்கறீங்களா? போட்டோஷாப் சாப்ட்வேர் மூலம் அழகான பார்டர் படங்களுக்கு கொடுக்கலாம். இந்த பதிவில் SIMPLE BORDER கொடுப்பது என்பதை தெரிந்துகொள்ளலாம்.
நான் போட்டோஷாப் CC வர்சன் உபயோகிக்கிறேன். எனவே அதில் எப்படி border அமைப்பது என்பதை கூறுகிறேன். Photoshop -ல் பார்டர் அமைக்க சில வழிகள் உள்ளன. அனைத்துமே எளிதானதுதான்.
போட்டோஷாப் – பார்டர் அமைப்பது எப்படி |
1. முதலில் படத்தை போட்டோஷாப்பில் திறந்து கொள்ளுங்கள். (போட்டோஷாப்பில் படத்தை திறக்க Ctrl + O கொடுத்து கம்ப்யூ-ட்டரில் உள்ள படத்தை போட்டோஷாப்பில் ஓப்பன் செய்து கொள்ளலாம். )
2. Ctrl+Shift+N கொடுத்து புதிய லேயரை உருவாக்கி கொள்ளவும்.
3. புதிய லேயரை படத்திற்கு தேவையான பார்டர் உருவாக்க பயன்படுத்திக்கொள்ளலாம். அதற்கு முதலில் புதிய லேயரை தேர்ந்தெடுத்து கொள்ளவேண்டும்.
4. பார்டர் உருவாக்க மார்க்யூ டூலை பயன்படுத்த வேண்டும்.
இதற்கு ஷார்ட் கட் M.
google_ad_client = "ca-pub-2152010975483882"; google_ad_slot = "2962536853"; google_ad_width = 300; google_ad_height = 600; google_language = "en"; //pagead2.googlesyndication.com/pagead/show_ads.js5. Marquee டூலை எடுத்துக்கொண்டு, எந்தளவுக்கு பார்டர் வேண்டுமோ அந்தளவுக்கு புதிய லேயரின் மீது தேர்வு செய்யவும்.படத்தை பார்க்கவும்.
6. பிறகு Ctrl + I கொடுத்து அதை Invert செய்துகொள்ள வேண்டும். அப்படி செய்யும்பொழுது செலக்ட் செய்த பகுதி இப்படி மாறிவிடும்.
பிறகு என்ன கலரில் பார்டர் வேண்டுமோ அந்த நிறத்தை நிரப்ப வேண்டும். வண்ணம் நிரப்புவதற்கு 2 வழிகளை பயன்படுத்தலாம்.
7. 1. Brush Tool மூலம் வண்ணம் தீட்டுவது
.
2. Paint Bucket டூலை பயன்படுத்தி, புகைப் படத்தில் செலக்ட்செய்த பகுதியை வண்ணத்தில் நிரப்பிவிடலாம்.
பயன்படுத்துவது. (நிறம் நிரப்புவதற்கு Bucket Tool பயன்படும். ஷார்ட் கட் கீ G. எளிதாக இருக்க ப்ரஸ் டூலை பயன்படுத்தி வண்ணத்தை இன்வர்ட் செய்த பகுதியில் தீட்டிவிடலாம். ப்ரஸ் டூலை தேர்வு செய்து கொண்டு , பார்டர் அமைய வேண்டிய வண்ணத்தை Swatches ல் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
நிறத்தை செலக் செய்த பிறகு, Invert செய்து தேர்வாகி இருக்கும் பகுதியில் தேவையான நிறத்தை தீட்டிவிடலாம். இது மிக மிக எளிதானதாகும்.. அல்லது பெயின்ட் பக்கெட் டூல் மூலம் பெயிண்ட் நிறத்தை தேர்ந்தெடுத்து பார்டர் வேண்டிய பகுதியின் மீது கிளிக் செய்தால் அந்த நிறம் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதியில் Fill ஆகி விடும். முழுவதும் BRUSH செய்த பிறகு உங்களுடைய படத்திற்கு அழகான "பார்டர்" கிடைத்திருக்கும். (படத்தைப் பார்க்க)
Border in Photosohp cc |
How to make border in Photoshop cc 2016
இப்பொழுது உங்கது படத்திற்கு தேவையான பார்டர் கிடைத்து இருக்கும். மேலும் வித்தியாசமான முறையில் போட்டோஷாப் மூலம் ஒரு படத்திற்கு பார்டர் அமைப்பது எப்படி என்பதை அறிந்துகொள்ள கீழுள்ள வீடியோவை பார்க்கவும்.
போட்டோக்களை எடிட் செய்து அழகூட்ட பயன்படும் (photographic designer)பயன்படும் ஓர் அருமையான மென்பொருள் போட்டோஷாப். நேரடியாக தமிழ் எழுத்துருக்களை போட்டோஷாப்பில் பயன்படுத்த முடியாது எனினும்போட்டோஷாப்பில் தமிழ் எழுத்துருக்களை பயன்படுத்துவதற்கான சாத்தியங்கள் உள்ளது. அது குறித்த விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
போட்டோஷாப்பில் தமிழ் எழுத்துரு பிரச்சினை
போட்டோஷாப்பில் ஆங்கிலத்தில் எழுதுவது எளிதானதுதான். அது இயல்பிருப்பாக அமைந்திருக்கும். தமிழில் எழுதுவது கடினம். தமிழ் எழுத்துருக்களை அம் மென்பொருளை எடுத்துக் கொள்ளாது. தமிழில் தட்டச்சிட்டாலும் அவைகளை சிறிய கட்டங்களாகவோ அல்லது குறியீடுகளாகவோ மாறிவிடும்.
எழுத்துரு பிரச்னையைத் தீர்க்க வழி
போட்டோஷாப்பில் பயன்படுத்த விரும்பும் தமிழ் எழுத்துருக்களை தரவிறக்கம்செய்து கொண்டு, அவற்றை கணினியில் உள்ள Fonts போல்டரில் சேர்க்க வேண்டும்.
Also Read: கம்ப்யூட்டரில் புதிய எழுத்துருக்களை Fonts சேர்ப்பது எப்படி?
பிறகு NHM Writer மென்பொருளின் துணையுடன் உங்களுக்கு வேண்டிய எழுத்துக்களை உள்ளிட்டு, அவற்றை காப்பி செய்துகொண்டுபோய் போட்டோஷாப்பில் பேஸ்ட் செய்யலாம். அல்லது e-Kalappai, Azhagi மென்பொருட்களினையும் பயன்படுத்தலாம். அழகி மென்பொருளிலேயே எழுத்துரு மாற்றிக்கொள்ளும் வசதி உண்டு.
தமிழ் எழுத்துரு தரவிறக்கம் & நிறுவல்
யுனிக்கோட் எழுத்துருக்களிலேயே பல வடிவ எழுத்துருக்கள் உள்ளன. அவற்றை Download செய்து பயன்படுத்தலாம்.
- டவுன்லோட் செய்யப்பட்ட எழுத்துருக்களை காப்பி செய்துகொண்டு, கம்ப்யூட்டரில் Start பட்டனை அழுத்தி,
- Control Panel என்பதை கிளிக் செய்து,
- Fonts போல்டரை திறந்து,
- அதில் Paste செய்துவிடலாம்.
- பிறகு பாண்ட்போல்டரை மூடிவிடலாம்.
NHM Converter:
NHM Converter என்பது ஒரு எழுத்துரு மாற்றி மென்பொருளாகும். இந்த மென்பொருள் மூலம் ஒரு எழுத்துருவில் உள்ள வார்த்தைகளை மற்றொரு எழுத்துருவிற்கு மாற்றிக்கொள்ள முடியும்.
உங்களுக்கு யுனிகோட் எழுத்துரு வேண்டும். ஆனால் பாமினி தமிழ் தட்டச்சு மட்டுமே தெரியும் எனில் பாமினி எழுத்துருவைப் பயன்படுத்தி வேண்டியதை தட்டச்சிட்டுவிட்டு, அவற்றை அப்படியே Unicode எழுத்துருவை தேர்ந்தெடுத்து Convert என்ற பொத்தானை சொடுக்குவதன் மூலம் மாற்றிக்கொள்ள இயலும்.
தமிழ் தட்டச்சு தெரியவில்லையா?
NHM Writer- மென்பொருளில் உள்ள Phonetic முறையைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் ஆங்கில எழுத்துகளை உள்ளிட்டு ஒலிபெயர்ப்பு முறையில் தமிழ் வார்த்தைகளை பெறலாம். பிறகு அந்த வார்த்தைகளை NHM Converter மூலம் தேவையான எழுத்துருவிற்கு மாற்றிக்கொண்டு, மாற்றிய எழுத்துருவை போட்டோஷாப்பில் பயன்படுத்திக்கொள்ள முடியும். போட்டோஷாப்பில் Text Tool தேர்ந்தெடுத்து அதில் பேஸ்ட் செய்த பிறகு அந்த எழுத்துக்குரிய தமிழ் Font -ஐ தேர்ந்தெடுப்பதன் மூலம் தமிழ் எழுத்துகள் காட்சி அளிக்கும்.
Tam, Bamini, Tab, TACE, TSCII, Unicode, Vanavil, Shreelibi, Unicode, Vanavil, Softview ஆகிய தமிழ் எழுத்துருக்கள் உள்ளன. வேண்டிய எழுத்துருக்களை இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.
எளிய தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ள இந்த தளத்தை நீங்கள் அணுகலாம்.
Also Read: தமிழில் டைப் செய்ய பயன்படும் NHM – Writer மென்பொருள்
வீடியோ டுடோரியல் :
கீழிருக்கும் இணைப்பிணை சொடுக்கி இப்பதிவிற்கான வீடியோவினைக் காணுங்கள்.
How to use tamil in photoshop cs3 (video tutorial)
Tags: NHM writer, NHM Converter, font converter, tamil font converter, photoshop cs3, tamil in photoshop cs3, Photoshop, Tamil Type in photoshop, tamil type in photoshop cs3, Type tamil fonts, photoshop tamil type.
பூமியில் மட்டுமே உயிரனங்கள் தோன்றி மறைகின்றன. ஒரு செல் உயிரினமாகத் தோன்றி.. பல செல் உயிரினங்களாக மாறி, வாழும் இடத்திற் கேற்ப, தகவமைப்புகளைப் பெற்று, பல்வேறு பரிணாம வளர்ச்சிகளுக்குப் பிறகு மனிதன் என்ற உயிரினம் முழுமைப் பெற்றது.
இருபதாம் நூற்றாண்டில் இருக்கும் மனித உயிரினம் மட்டுமே, தான் யார்..? எங்கிருந்து தோன்றினோம்.? இப்போது இருக்கும் இடம் எது? இதைத்தவிர வேறேதேனும் கோள்கள் இருக்கின்றனவா? என தான் தோன்றிய பூமி மற்றும் அதுசார்ந்த பிறகோள்களைப் பற்றியும், விண்வெளியில் உள்ள பல்வேறு நட்சத்திரத் தொகுதிகளைப் பற்றியும், பால்வெளி அண்டத்தைப் பற்றியும் ஆராயத் துவங்கி விட்டான்.
பரந்துவிரிந்த இப்பிரபஞ்சத்தின் தோற்ற மூலம் எது? பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டே செல்கிறது என்றால் அதன் எல்லை எங்குள்ளது? இதுபோன்ற கேள்விகளுக்கும் விடைத்தேடும் விதமாக பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொண்டு வருகிறான்.
அந்த வகையில் ஒரு புதிய ஆராய்ச்சிக்கு உருவாக்கப்பட்டதுதான் இப்புதிய அதிவேக .. மிகப்பெரிய்ய….. டிஜிட்டல் கேமரா…
இதில் என்ன உள்ளது..? எதற்காக இந்த பிரமாண்டமான கேமிரா? என்ற கேள்விகள் எழுகிறது அல்லவா? அதற்கான சுருக்கமான பதிலே இப்பதிவு.
அண்டவெளியில் உள்ள நட்சத்திர மண்டலங்களையும் விண்ணில் உள்ளவற்றையும் படம் பிடிப்பதற்கென்றே உலகிலேயே மிகப்பெரிய டிஜிட்டல் கேமராவை (World largest digital camera with 570 pixels)உருவாக்கியுள்ளது ஒரு வானவியல் ஆராய்ச்சிக் குழு.
உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் கேமிரா |
பொதுவாக வானில் உள்ள நட்சத்திரங்கள் மற்றும் கோள்களை ஆராய டெலஸ்கோப் பயன்பாட்டில் இருந்து கொண்டுள்ளது. ஆனால் ஒட்டுமொத்த பிரபஞ்சத்தைப் பற்றி அறிய அவை போதுமானதாக இல்லை. கோள்களையும் குறிப்பிட்ட நட்சத்திரங்களை மட்டுமே அவை அறிய போதுமானதாக உள்ளது.
இப்பிரபஞ்சம் விரிவடைகிறது. பிரபஞ்சம் விரிவடைவதற்கான காரணத்தை அறியவும், பிரபஞ்சத்தில் Dark Energy பற்றிய ஆராய்ச்சியை மேற்கொள்ளவும் வானியல் ஆராய்ச்சியாளர் இப்புதிய மிகப்பெரிய டிஜிட்டல் கேமராவை உருவாக்கியுள்ளனர்.
டார்க் எனர்ஜியைப் பற்றிய அறிய "Dark Energy Mission – டார்க் எனர்ஜி மிஷன்" என்ற ஆராய்ச்சி அமைப்புத் தொடங்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் முதற்கட்ட நடவடிக்கையே மேற்குறிப்பிட்ட கேமராவாகும்.
இந்த கேமரா 570 Mega pixel கொண்டது. இதன் மூலம் ஒரே Snap Shot ல் ஒரு லட்சம் கேலக்சியிலிருந்து வரும் ஒளியைப் பார்க்க முடியும். மிகச்சிறந்த ஒப்பற்ற இந்த பவர்புல் கேமராவானது இந்த ஆராய்ச்சிக்கும் மிகவும் உதவிகரமாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
உலகின் மிகப்பெரிய அதிகவேகமான டிஜிட்டல் கேமரா அமைந்துள்ள கூடத்தின் படம் இது.
Tags: camera, digital camera, biggest camera, 570 mega pixel camera, World's first largest camera with 570 Mega pixels.
இமேஜ் எடிட்டிங் செய்யவும், நிறைய டிசைன்கள் செய்யவும் பயன்படும் ஒரு தொழில்நுட்ப மென்பொருள் போட்டோசாப். அடிப்படை விஷயங்களை கற்றுக்கொள்ள போட்டோஷாப் மென்பொருள் உங்களுடைய கணினியில் நிறுவியிருந்தாலே போதுமானது.
நீங்களே போட்டோஷாப் கற்றுக்கொள்ள முடியும். இணையத்தில் நிறைய போட்டோஷாப் கற்றுக்கொடுக்கும் தளங்கள் உள்ளன. பெரும்பாலான ஆங்கிலத்தில்தான் தளங்கள் உள்ளது. இணையத்தில் உடனடியாக போட்டோ எடிட்டிங் செய்யப் பயன்படும் தளங்களும் உள்ளன.
எனினும் அடிப்படை விடயங்களை கற்றுக்கொள்வதன் மூலம் இணைய இணைப்பின்றியே போட்டோ எடிட்டிங் மற்றும் டிசைனிங்க வேலைகளைக் கற்றுக்கொள்ள முடியும். அதற்கு உதவுகிறது போட்டோஷாப் இன் தமிழ் (www.photoshopintamil.blogspot.com)
போட்டோஷாப் கற்க விரும்புவர்களுக்கு இந்த வீடியோ பயனுள்ளதாக இருக்கும்.
இமேஜ் எடிட்டிங் செய்யவும், நிறைய டிசைன்கள் செய்யவும் பயன்படும் ஒரு தொழில்நுட்ப மென்பொருள் போட்டோசாப். அடிப்படை விஷயங்களை கற்றுக்கொள்ள போட்டோஷாப் மென்பொருள் உங்களுடைய கணினியில் நிறுவியிருந்தாலே போதுமானது.
நீங்களே போட்டோஷாப் கற்றுக்கொள்ள முடியும். இணையத்தில் நிறைய போட்டோஷாப் கற்றுக்கொடுக்கும் தளங்கள் உள்ளன. பெரும்பாலான ஆங்கிலத்தில்தான் தளங்கள் உள்ளது. இணையத்தில் உடனடியாக போட்டோ எடிட்டிங் செய்யப் பயன்படும் தளங்களும் உள்ளன.
எனினும் அடிப்படை விடயங்களை கற்றுக்கொள்வதன் மூலம் இணைய இணைப்பின்றியே போட்டோ எடிட்டிங் மற்றும் டிசைனிங்க வேலைகளைக் கற்றுக்கொள்ள முடியும். அதற்கு உதவுகிறது போட்டோஷாப் இன் தமிழ் (www.photoshopintamil.blogspot.com)
போட்டோஷாப் கற்க விரும்புவர்களுக்கு இந்த வீடியோ பயனுள்ளதாக இருக்கும்.
வணக்கம் நண்பர்களே.. !!
போட்டோஷாப் கற்றுக்கொள்ள அனைவரும் விரும்புவர். அதற்காக இணையத்தில் பல Photoshop Tutorial -களை நாடுவதுண்டு. பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே இத்தளங்கள் இருப்பதால் இவற்றைப் புரிந்துகொண்டு, அதைப்போன்றே செய்வது என்பது சற்று சிரமமானதாகவே இருக்கும்..
இந்த மாதிரியான சூழ்நிலைகளில் அரைகுறையாகப் புரிந்துகொண்டு அதைச் செய்யும்போது நாம் எதிர்பார்த்த Effect கிடைக்காது.
மாதிரிக் கோப்புகளை(Model Photoshop files) காணும்போது அதில் என்னனென்ன Action இருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டு, எவ்வாறு செய்திருக்கிறார்கள் என்பதைக்கூட எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். (இது போட்டோஷாப் கற்றவர்களுக்கு எளிதாக விளங்கும்)
அதுபோலவே நாம் தரவிறக்கிய PSD கோப்புகளிலேயே சில மாற்றங்களைச் செய்து நமக்கு ஏற்றவாறு மாற்றி, அதையே நாம் பயன்படுத்திக்கொள்ளலாம்.
உதாரணமாக கோப்புகளில் உள்ள எழுத்துகளை எடுத்துவிட்டு நமக்கு வேண்டியதை அதில் எழுதி கோப்பைச் சேமித்துப் பயன்படுத்தலாம்.
மேலும் போட்டோஷாப்பில் இருக்கிற எத்தனையோ Photoshop Tricks – களையும், Photoshop Effect-களையும் கற்க உதவும்.
இத்தகைய போட்டோஷாப் கோப்புகளை தரவிறக்குவதற்காகவே இத்தளம் அமைந்துள்ளது.
இதிலிருக்கும் 4500 க்கும் மேற்பட்ட PSD கோப்புகளை இலவசமாக தரவிறக்கிப் பயன்படுத்த முடியும்.
மேலும் வேண்டிய கோப்புகளை Search செய்தும் தேடிப் பெறலாம்.
தளத்திற்கான சுட்டி..http://searchpsd.com
தளத்தில் நுழைந்து all Category என்பதில் கிளிக் செய்து அகர வரிசையில் அடுக்கப்பட்ட கோப்புகளில் உங்களுக்குத் தேவையான தலைப்புகளில் உள்ள கோப்புகளைக் கிளிக் செய்து , அதற்கு கீழே DOWNLOAD PSD FILE என்பதை கிளிக் செய்வதன் மூலம் எளிதாக கோப்புகளை டவுன்லோட் செய்துகொள்ளலாம்.
கோப்புகளை தரவிறக்க கீழ்நோக்கிய அம்புக்குறியைச் சொடுக்கவும். |
zip file -ஆக இருக்கும் கோப்புகளை விரித்துப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
பதிவைப் பற்றிய சந்தேகங்களுக்கு பின்னூட்டத்தில் தொடர்புகொள்ளுங்கள். நன்றி நண்பர்களே..!!!!
பதிவு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். நன்றி நண்பர்களே..!!
போட்டோ எடிட்டிங் மென்பொருள் கிம்ப்
போட்டோ எடிட்டிங் செய்ய போட்டோஷாப் மென்பொருள் பயன்படுத்துவதைப் போல, மிக எளிதாக டவுன்லோட் செய்து பயன்படுத்தக் கூடிய இலவச மென்பொருள் கிம்ப்.
இதில் உள்ள பல அம்சங்கள் போட்டோஷாப் மென்பொருளில் உள்ளது போலவே இருப்பதால் பலரும் இதைப் பயன்படுத்துகின்றார்கள். முற்றிலும் இலவசமாக டவுன்லோட் செய்யலாம்.
கிம்ப் சில அடைப்படைகள் (Basic of GIMP):
இந்த போட்டோ எடிட் மென்பொருளைத் தரவிறக்கும் முன்பு சில அடிப்படைகளைத் தெரிந்துகொள்வோம்.
போட்டோ எடிட் மென்பொருள்களில் சிறந்ததாக கருத்தப்படும் Photoshop மென்பொருளைப் போன்று பல விதங்களிலும் பயன்பாடுமிக்க மென்பொருள் இந்த கிம்ப் 2.6.12(GIMP OPEN SOURCE PHOTO EDIT SOFTWARE).
போட்டோஷாப்பில் உள்ள அனைத்து விருப்பங்களும்(Options,menu) இதிலும் உள்ளது. இது Open sources software என்பதால் இதை முற்றிலும் இலவசமாக தரவிறக்கிக்கொள்ள முடியும்.
GIMP என்பதன் விரிவாக்கம் GNU Image Manipulation Program என்பதாகும். போட்டோஷாப் மென்பொருளின் மாற்றாக (Substitute) அமைந்த ஒரு சிறந்த மென்பொருள்தான் இந்த கிம்ப்.
கிம்ப் இலவச போட்டோ மென்பொருள் |
போட்டோஷாப் மென்பொருளுக்கும், GIMP மென்பொருளுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு.
போட்டோஷாப்பின் கோப்பு Extension .psd என முடியும். கிம்பின் கோப்பு வகை Extension XCF என முடியும்.
இதில் போட்டோஷாப் மென்பொருள் கோப்புகளை Gimp-ல் திறக்க முடியும். ஆனால் கிம்ப் மென்பொருளின் உதவியால் உருவாக்கப்பட்ட கோப்புகளை போட்டோஷாப் மென்பொருளில் திறக்க இயலாது. இந்த வகையில் கிம்ப் சிறப்பானது என்பதை அறியலாம்.
போட்டோஷாப்பில் உள்ள வசதிகள் ஒரு சில இவற்றில் இல்லையெனினும், முற்றிலும் இலவசம் என்பதால் பெரும்பாலானோரால் இம்மென்பொருள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இம்மென்பொருளைக் கொண்டு என்ன செய்யலாம்?
- உங்கள் போட்டோக்களை எடிட் செய்து கொள்ளலாம்.
- பலவித பார்மட்களில் படங்களை சேமித்துக்கொள்ளலாம். உதாரணமாக TIFF, JPEG, GIF, PNG, PSD போன்ற பார்மட்களில் சேமித்துக்கொள்வதோடு இத்தகை கோப்புகளையும் திறந்து படங்களை எடிட் செய்யலாம்.
- மேலும் Adobe Photoshop documents, Autodesk flic animation , Corel Paint Shop Pro images போன்றவற்றையும் ஆதரிக்கிறது.
- கிம்ப் மென்பொருளில் பல வசதிகள் அடங்கியிருக்கின்றன. Filters, Brushes, selections, layer, masking tools, crop tool என்ற போன்ற கருவிகள் போட்டோஷாப்பில் உள்ளதைப் போன்றே இருக்கிறது.
- 48 வகையான பிரஷ்கள் பயன்பாட்டில் உள்ளன.
- இதில் வேண்டிய பிரஷ்ஷை நாமே உருவாக்கிக்கொள்ளலாம் , hard brush, soft brush, erased brush, மற்றும் வெவ்வேறு opacity கொண்ட தூரிகைகளையும் உருவாக்கிக்கொள்ளலாம்.
- இதில் கிரேடியன்ட்(Gradient) சப்போர்ட் உள்ளது.
- RGB, HSV, color wheel , CMYK போன்ற நிறங்களைக் கையாள முடியும்.
- இதில் வட்ட வடிவ (Elliptical ), நீள் சதுரம்(Rectangle marquee tool), ஆகிய கருவிகளைக் கொண்டு தேர்ந்தெடுத்தல்களை(selection) செய்யலாம்.
- இண்டலிஜெண்ட் சிசர் (iScissors tool) கருவி கடின நிறமாற்றங்களை(hard color changes) -ஐ குறிப்பதற்கான பகுதிகளுக்கிடையே தானாக பாதைகளை(automatic roots) உருவாக்கப் பயன்படுகிறது.
- கிம்ப் பொதுவாக லேயர்களுக்கு(layers) துணைபுரிகிறது. இதில் ஒளிஊடுருவும் லேயரும் (layer's opacity)அடங்கும்.
- அதாவது இந்த வகை லேயர்களை திரையில் காட்டுவதற்கும், மறைப்பதற்கும், ஒளி ஊடுருவும் தன்மைகொண்டதாகவும் மாற்ற முடியும்.
- போட்டோஷாப்பில் உள்ளதைப்போன்றே channels படங்களுக்கு வேறுபட்ட நிறங்களைக் கொடுக்கிறது.
- இம்மென்பொருளில் 150 க்கும் மேற்பட்ட எஃபக்ட்கள் (Effects), ஃபில்டர்கள்( Filter) அடங்கியிருக்கின்றன.
- முக்கிய எஃப்க்ட்களான Drop Shadow, Blur, Motion blur மற்றும் Noise ஆகியவை அடங்கியிருக்கின்றன.
- இதில் இருக்கும் ஸ்கிரிப்ட் Script-Fu என்பது. இது கிப்ம் பணிகளை செய்ய எழுதப்படும் ஒரு புரோகிராம் லாங்குவேஜ்- Programme language ஆகும். தமிழில் சொல்வதெனில் கட்டளை மொழி.
- Python, Perl, TCL போன்ற மொழிகளும் வெளியிலிருந்து பயன்படுத்தப்படுகிறது.
- இம்மென்பொருள் GPL license கீழ் இலவச மென்பொருளாக அனைவருக்கும் வழங்கப்படுகிறது.
இத்தனை வசதிகள் கொண்ட GIMP மென்பொருளைத் தரவிறக்கம் செய்ய சுட்டி:
(Download GIMP 2.6.11 )
அடுத்து வரும் பதிவுகளில் கிம்ப் பயன்படுத்துவது எப்படி ? கிம்பில் அடிப்படைகள் என்பதைப் பற்றிப் பார்ப்போம்.. கிம்ப்பில் மாயாஜாலம் செய்யலாம் வாங்க எனும் பகுதியில் படிப்போம்.. !
நன்றி நண்பர்களே.. பதிவைப்பற்றி கருத்துகளை பகிர்ந்துகொள்ளுங்கள். சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரிவியுங்கள்.
Posted by: shirlyshirlytygarte0270679.blogspot.com
Source: https://palanivels.wordpress.com/category/tamil-photoshop-tutorial/
Post a Comment